காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்குள் இதன் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு படத்தை வெளியிட உள்ளனர். இடையில் இந்தப்படம் நிறுத்தி வைக்கப்பட்ட சமயத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார் அஜித். ஐதராபாத்தில் ஒருகட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஏற்கனவே இதன் முதல்பார்வை வெளியானது. அதில் மூன்று அஜித் இடம் பெற்று இருந்தார். இதை வைத்து அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று(ஜூன் 27) இதன் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் God Bless U Mamae என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு போஸ்டரில் துப்பாக்கிகள் ஏராளமாக இடம் பெற கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு, கையில் டாட்டு எல்லாம் போட்டு நாக்கை கடித்தபடி ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். அதோடு அவரது சட்டையில் எண் 63 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்க்கையில் இவர் கைதியாக இருக்கலாம் என தெரிகிறது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கினர்.