'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம் | 'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? | பிளாஷ்பேக்: முரணான தலைப்பு, முத்தான வெற்றி, முயற்சித்து சாதித்த இயக்குநர் கே பாக்யராஜ் | 'சூர்யா- 46' படத்தின் டைட்டில், ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது! | பிளாஷ்பேக்: வாள்வீச்சு நாயகன் ரஞ்சனின் வெள்ளித்திரை வரவுக்கு வித்திட்ட “ரிஷ்யசிருங்கர்” | கவர்ச்சி மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த கயாடு லோஹர்! | 'வாரணாசி' படப்பிடிப்பை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி! | 'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா | குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் |

2024ம் ஆண்டில் அடுத்து வர உள்ள மாதங்களில் சில டாப் நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்', கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2', விஜய் நடித்துள்ள 'தி கோட்', அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' ஆகிய படங்கள் சீரான இடைவெளியில் வெளியாக உள்ளன.
கமல்ஹாசன் நடித்துள்ள 'கல்கி 2898 ஏடி' படம் இன்று வெளியாகியது. அதோடு சில தினங்களுக்கு முன்பு 'இந்தியன் 2' டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் போட்டியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'கூலி' படத்திற்கான டெஸ்ட் ஷூட் புகைப்படம் ஒன்றை நேற்று வெளியிட்டார் லோகேஷ்.
விஜய் நடித்துள்ள 'தி கோட்' படத்தின் இரண்டாவது சிங்கிள் மற்றும் விஜய் பிறந்தநாள் வீடியோ ஒன்றும் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதற்குப் போட்டியாக அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் சில மேக்கிங் வீடியோக்களை புதிதாக வெளியிட்டனர். இன்று மாலை அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.
இப்படி மாறி, மாறி ஏட்டிக்குப் போட்டியாக அப்டேட்டுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் அப்டேட், சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் அப்டேட் கேட்டு அதன் தயாரிப்பாளரை தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.