
இந்தியன் 2 டிரைலர் - எத்தனை தோற்றங்களில் கமல்ஹாசன்?
டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. "இந்தியன்" படத்தில் இடம் பெற்ற அப்பா, மகன் கதாபாத்திரங்களில் அப்பா கதாபாத்திரம் "இந்தியன் 2" படத்தில் மீண்டும் வருகிறது. முதல் பாகத்தில் மகனையே கொன்றுவிடுவார் அப்பா.
இரண்டாம் பாகத்தில் அப்பா கதாபாத்திரத்தில் அதே வயதான தோற்றத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். முதல் பாகத்தின் தோற்றம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றிருந்தாலும் மேலும் விதவிதமான தோற்றங்களிலும் அவர் வருகிறார். இரண்டாம் பாக டிரைலரில் மொத்தம் 6 விதமான தோற்றங்களில் கமல்ஹாசனின் மேக்கப் அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் இது பற்றித்தான் இப்போது பேச்சு அதிகமாகியுள்ளது. அவற்றை வைத்து பல மீம்ஸ்களும் அதற்குள் வர ஆரம்ப்பித்துவிட்டன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!