
ரஜினி 172 அல்லது ரஜினி 173 - மீண்டும் பேட்ட கூட்டணி
ரஜினி தற்போது "வேட்டையன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி" படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அது ரஜினியின் 171வது படமாக உருவாகப் போகிறது.
அதற்கடுத்து "ஜெயிலர்" படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாருடன் "ஜெயிலர்" படத்தில் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகியது. இதனிடையே, கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஒரு கதையைச் சொன்னாராம். அந்தக் கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதாம். அதனால் அக்கூட்டணி மீண்டும் இணையும் என்கிறார்கள்.
அந்தப் படம் ரஜினி 172 ஆக உருவாகுமா அல்லது 173 ஆக உருவாகுமா என்பது விரைவில் தெரிய வரும். கார்த்திக் சுப்பராஜ் தற்போது சூர்யா நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு ரஜினி படத்திற்கு வருவார் என்று தகவல்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!