தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் | துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 மில்லியன் பார்வைகள் | 50ஐக் கடந்தது 2026 ரிலீஸ் : இந்த வாரமும் 5 படங்கள் ரிலீஸ் | வெற்றி விழாவுக்கு தயாராகும் தாய்கிழவி படக்குழு |

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கி உள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் 27ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில், இந்த படத்தில் பிரபாஸின் நண்பனாக புஜ்ஜி என்ற ஒரு ரோபோ நடித்திருக்கிறது. அந்த ரோபோவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் கொடுத்திருக்கிறார் என்று அறிவித்துள்ளார்கள். அதோடு இந்த புஜ்ஜி என்ற ரோபோவை வருகிற 22ம் தேதி அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.




