
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த்
மே 19, 2024
Advertisement
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் சித்தார்த்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் நடித்து வெளிவந்த "சித்தா" திரைப்படம் அவரை மீண்டும் வெற்றி பாதையை நோக்கி திருப்பியது. இதனால் புதிதாக தேர்வு செய்யும் கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் ஆகிய படங்களைக் இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கின்றார். இது சித்தார்த்தின் 40வது படமாக உருவாகிறது. இதனை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படம் துவங்க உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!