
தி கோட் - போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பம்
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். இதனிடையே படத்தின் வியாபாரப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிகிறது. ஓடிடி, சாட்டிலைட் ஆகியவற்றிற்றகான உரிமைகள் மிகப்பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
தியேட்டர் உரிமைகளையும் விஜய்யின் முந்தைய படமான "லியோ" படத்தை விடவும் அதிக விலைக்கு விற்கவே முயற்சித்து வருகிறார்களாம். இந்தப் படம் தவிர இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்க உள்ளார். அதன்பிறகு தீவிர அரசியலில் இறங்கப் போகிறார். எனவே, இந்தப் படத்தின் வியாபாரம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக நடக்கும் என எதிர்பார்க்கிறார்களாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!