இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

மெட்ராஸ் ஸ்டுடியோஸ் சார்பில் அன்சு பிரபாகர் தயாரிக்கும் படம் '13'. ஜிவி பிரகாஷ், கவுதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கிறார்கள். இதில் கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிக்கா, தொகுப்பாளினி ஐஸ்வர்யா, ஆதித்யா கதிர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். 'டார்லிங்' படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் த்ரில்லர் படம் இது. படத்திற்கு சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்துகுமார் இசையமைத்துள்ளார். புதுமுகம் கே.விவேக் இயக்கியுள்ளார். சென்னை மற்றும் அடர்ந்த காடுகளில் தொடர்ச்சியாக 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது.
படம் குறித்து இயக்குநர் விவேக் கூறியிருப்பதாவது : ராட்சசன், போர் தொழில் படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, 13 அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை படம் உடைத்துக் காட்டும். நண்பர்கள் ட்ரிப் செல்லும்போது, ஜாலியாக செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு எதிராக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. என்றார்.




