பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… | சென்னையும்... ‛கப்புள் பிரண்ட்லி' படமும் : இயக்குனர் அஷ்வின் பேட்டி | 'கங்குவா' சாதனையை முறியடிக்குமா 'கமல் ரஜினி ரீ யூனியன்' வீடியோ | தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் | தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் |

'எட்டு தோட்டாக்கள்' படத்தில் அறிமுகமாகி, அதன்பிறகு ஜீவி, கேர் ஆப் காதல், வனம், மெம்ரீஸ், பம்பர், ரெட் சாண்டல் படங்களில் நடித்தவர் வெற்றி. தற்போது அவர் நடித்து வரும் படம் 'ஆலன்'. இதில் அவருடன் நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, மதன்குமார், விவேக் பிரசன்னா, கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.சிவா என்ற புதுமுகம் இயக்குகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது '' ஆலன் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை தேடல்... மற்றும் ஓர் அழுத்தமான காதல் களம்... இந்த படம் படமாக்கப்பட்டபோது கொடைக்கானலில் கடும் மழையும், குளிரும் உடன் பயணித்தது. சென்னையில் படமாக்கப்பட்ட போது புயலும், காற்றும் இந்த காதலை ஆரத் தழுவியது. வாரணாசியிலும், ரிஷிகேசிலும் படமாக்கப்பட்ட போது பனிக்காற்றும், கடும் குளிரும் கூடவே இருந்து தாலாட்டியது. இப்படி இயற்கை அன்னை ஆசீர்வதித்த இந்த காதலை தமிழ் ரசிகர்களின் பார்வைகளுக்கு பரிமாற.. இறுதி கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்'' என்றார்.