நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

முகேஷ்குமார் சிங் இயக்கத்தில், ஸ்டீபன் தேவசி, மணிசர்மா இசையமைக்க விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கண்ணப்பா'. சரித்திர கால பக்திப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் பிரபாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள்.
இப்போது ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் இணைகிறார் என படத்தின் நாயகன் விஷ்ணு மஞ்சு அறிவித்துள்ளார். அக்ஷய்குமார் ஐதராபாத்திற்கு வந்த வீடியோவைப் பதிவிட்டு, “கண்ணப்பா பயணம் இன்னும் உற்சாகமாகிறது. சூப்பர் ஸ்டார் அக்ஷய்குமாரை தெலுங்கு திரையுலகத்திற்கு வரவேற்கிறோம். கண்ணப்பா படத்தின் மூலம் தெலுங்கில் அவர் அறிமுகமாவதை அறிவிக்கிறோம். மறக்க முடியாத சாகசத்திற்குத் தயாராக இருங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் கன்னடத்தில் 1993ல் வந்த 'விஷ்ணு விஜயா' என்ற படத்திலும், தமிழில் 2018ல் வந்த '2.0' படத்திலும் நடித்துள்ளார் அக்ஷய்குமார்.