பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கோட்'. சில தினங்களுக்கு முன்புதான் இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என ஒரு அப்டேட் கொடுத்தார்கள்.
அடுத்த அப்டேட்டாக இன்று (ஏப்.,14) தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முதல் சிங்கிள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்படி மாலை 6 மணிக்கு முதல் பாடலாக ‛விசில்போடு' பாடல் வெளியானது. இப்பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார், நடிகர் விஜய் பாடியிருக்கிறார்.




