
ரோமியோவில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்புக்கொண்டது எப்படி? - இயக்குனர் விளக்கம்
படம் பற்றி இயக்குனர் விநாயக் கூறும்போது, “விஜய் ஆண்டனி அனைத்து வயதினருக்கும் பிடித்த ஹீரோ. தனித்துவமான ஜானர் மற்றும் புதிய கதைக்களங்களை முயற்சி செய்ய யாராவது விரும்பினால் அவர்தான் டாப் சாய்ஸாக இருப்பார். நான் "ரோமியோ" படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடித்ததும் விஜய் ஆண்டனியிடம் அதில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். ஆனால், கதை அவருக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனெனில், ரொமான்டிக் காமெடி ஜானரில் இதுவரை அவர் நடித்ததில்லை. ஆனால், அவர் கதையை கேட்டு, ரசித்து உடனடியாக படத்தைத் தயாரித்து, நடிக்க ஒப்புக் கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
மிருணாளினி ரவி சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். நகைச்சுவை, ரொமான்ஸ், எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எமோஷன் கலந்த ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்கு படமாக இருக்கும். படத்தைப் பார்த்துவிட்டு பார்வையாளர்கள் சிரிப்புடனும் முழு திருப்தியுடனும் தியேட்டர்களை விட்டு வெளியேறுவார்கள்" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!