சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் | துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 மில்லியன் பார்வைகள் | 50ஐக் கடந்தது 2026 ரிலீஸ் : இந்த வாரமும் 5 படங்கள் ரிலீஸ் |

நடிகர் விஷால் தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ஹரி இயக்கும் ‛ரத்னம்' என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருகிறது. படப்பிடிப்புக்கு இடையே சாப்பிடுவதற்கு முன்பாக விஷால் கடவுளை வணங்குவதும், அதனை நடிகர் யோகிபாபு பார்ப்பது போன்றும் ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சிலர் அதை கிண்டல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரத்னம் படத்தின் பிரஸ்மீட்டில் இந்த ட்ரோல் வீடியோ குறித்து விஷாலிடத்தில் கேட்டபோது, ‛‛சாப்பிடுவதற்கு முன்பு அனைத்து கடவுளையும் வணங்கிவிட்டு சாப்பிடுவதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். அதனால் என்னை ட்ரோல் செய்பவர்களை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை,'' என்று தெரிவித்தார் விஷால்.