ஓடிடியில் மீண்டும் 'துரந்தர்': இந்த வாரம் மிஸ் பண்ணிடாதீங்க...! | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'முட்ட கலக்கி' | பெத்தி ரிலீஸ் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர் | பெத்தி : மகன் ராம்சரண் பற்றி பெருமைப்படும் அப்பா சிரஞ்சீவி | முதல்வர் விஜயை சந்தித்து பார்த்திபன் வைத்த கோரிக்கை | எஸ்.பி.பி பிறந்தநாள்: இளையராஜா, கமல் வாழ்த்து | கயாடு லோஹரை வியந்த மாரி செல்வராஜ்! | இயக்குனர் ஆக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ் மகள்! | ஹிந்தி பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்! | என்றும் பதினாறாக ஒலித்த கந்தர்வக் குரலோன் எஸ்பி பாலசுப்ரமணியம் |

ஸ்ரீவாரி பில்ம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் படம் 'காதலே காதலே'. மஹத் ராகவேந்திரா - மீனாட்சி கோவிந்தராஜன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இயக்குநர் பாரதிராஜா, ஸ்ரீஜா ரவி, விடிவி கணேஷ், ரவீனா ரவி, ராஜ் அய்யப்பா உள்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் ரங்கநாதன் கூறியதாவது : 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'ஜோ' மற்றும் நம் இதயங்களை வென்ற மற்ற காதல் படங்களைப் போலவே மனதைக் கவரும் ஒரு மகிழ்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படமாக 'காதலே காதலே' இருக்கும். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விரைவில் படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதியை அறிவிப்போம் என்றார்.




