Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'லால் சலாம்' ஹார்ட்டிஸ்க் காணாமல் போனது உண்மை : மனம் திறந்த ஐஸ்வர்யா

08 மார், 2024 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Lal-Salaam-heart-disc-missing-is-true:-Aishwarya-opens-up

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய படம் 'லால் சலாம்' சமீபத்தில் வெளிவந்தது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்திருந்தார்கள். ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்தார். இந்த படத்தின் ஹார்ட்டிஸ்க் காணாமல் போனதாகவும், இதனால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், அதனால் தான் படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ஐஸ்வர்யா எந்த பதிலும் கூறவில்லை. படக் குழுவினர் மறுத்து வந்தார்கள். இதுகுறித்து மனம் திறந்து பேசி உள்ளார் ஐஸ்வர்யா.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் “படத்தின் ஹார்ட்டிஸ்க் காணாமல் போனது உண்மைதான். 21 நாள் நடத்திய படப்பிடிப்பு காட்சிகள் அந்த ஹார்ட்டிஸ்கில் இருந்தது. எல்லாமே படத்தின் முக்கியமான காட்சிகள், இது தவிர இன்னும் சில காட்சிகள் அழிந்து விட்டது. மீண்டும் படப்பிடிப்பு நடத்தி அந்த காட்சிகளை படமாக்க நினைத்தோம். ஆனால் நடித்தவர்கள் வேறு படங்களுக்கு சென்று விட்டார்கள். மீண்டும் அனுமதி வாங்குவதில் நிறைய சிக்கல்கள இருந்தது. இப்படி பல பிரச்சினைகள் இருந்ததால் இருக்கிற காட்சிகளை வைத்து சில சமரசங்களோடுதான் படத்தை முடித்தோம். அந்த ஹார்ட்டிஸ்க் மட்டும் காணாமல் போகாமல் இருந்திருந்தால் நான் சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக சொல்லியிருப்பேன். இந்த நிகழ்வு எனக்கு ஒரு பாடமாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சென்னையில் ரஜினி திரைப்பட விழா : 7 நாட்கள் நடக்கிறதுசென்னையில் ரஜினி திரைப்பட விழா : 7 ... ரிலீஸ் படம் : ஆரி ஜோடியான தீப்ஷிகா ரிலீஸ் படம் : ஆரி ஜோடியான தீப்ஷிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Manimaran - chennai,இந்தியா
09 மார், 2024 - 12:03 Report Abuse
Manimaran அந்த தெரு மட்டும் நேராக இருந்திருந்துச்சுன்னா...என் ஆட்டமே தனி தான்....
Rate this:
KayD - Mississauga,கனடா
08 மார், 2024 - 06:03 Report Abuse
KayD padam oothikittahuku hard disk mela pazhi.. ha ha ha
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in