யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு | என் கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கும் வெற்றி | பொன்னியின் செல்வன் பாடலில் தாகர் குடும்பத்திற்கு கிரெடிட் கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல் | பிளாஷ்பேக் : மோகன்லால் கேரக்டரில் நடித்த பாண்டியராஜன் | பிளாஷ்பேக்: நாடகத்தால் வெற்றி பெற்ற படம் | துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன்… தொடரும் காதல்?? | மார்ச் 6ல் வெளியாகிறது ரச்சிதா நடித்த ஹாரர் படம் | சாய் பல்லவி நடிப்பை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன் : மானசா வாரணாசி ஓபன் டாக் | சொந்த தொகுதியிலேயே வீடு கட்டும் பணியை துவங்கிய பாலகிருஷ்ணா | மும்பை படப்பிடிப்பில் படக்குழுவினருக்காக சென்னையிலிருந்து உணவு வரவழைத்த பிரபாஸ் |

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் வெளியிட்டார்கள். அதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்தது. என்றாலும் அந்த டீசரில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக சொல்லி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அமரனுக்கு எதிரான தங்களின் போராட்டம் இன்னும் தீவிரமாகும் என்றும், கமலின் மக்கள் நிதி மையம் கட்சியை இந்தியா கூட்டணியில் சேர்க்கக் கூடாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.




