
300 சென்டர்களில் 30வது நாளில் ஹனுமான்
மகேஷ்பாபு நடித்து வெளிவந்த "குண்டூர் காரம்" படத்தைக் காட்டிலும் இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு தெலுங்கு ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. படம் வெளிவந்து 30 நாட்கள் ஆன நிலையில் 300 கோடி வசூலைக் கடந்து இன்னும் 300 சென்டர்களில் படம் ஓடுகிறது. இந்த 2024ம் ஆண்டில் இந்தியத் திரையுலகின் முதல் பெரும் வசூல் படமாக இந்தத் தெலுங்குப் படம் அமைந்துள்ளது.
2022ம் ஆண்டில் ஆன்மிகம் கலந்த படமாக வந்த கன்னடப் படமான "காந்தாரா" படம் 400 கோடி வசூலை அள்ளியது. தெலுங்கில் ஆன்மிகப் படமாக வந்த இந்த "ஹனுமான்" படம் தற்போது 300 கோடியைக் கடந்துள்ளது. வளரும் நடிகரான தேஜா சஜ்ஜா படத்திற்குக் கிடைத்த வரவேற்பு பல முன்னணி நடிகர்களை கொஞ்சம் பொறாமையிலும் தள்ளியிருக்கிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!