மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் | பிளாஷ்பேக்: சிங்கிள் ஷாட் சண்டை காட்சியில் முதலில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: திடீரென காணாமல் போன பேபி உமா | தள்ளிப் போன “ஜனநாயகன், டாக்சிக்” ; 1000 கோடி முடக்கம்? | 'மைதிலி என்னை காதலி' நடிகர் மறைவு: டி.ராஜேந்தர் இரங்கல் | 'கே. சங்கர் 100' : நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் சிற்பிகளில் ஒருவர் |

'கேஜிஎப்' படங்களின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடக் கடைசியில் வெளிவந்த படம் 'சலார்'. பான் இந்தியா படமாக வெளியானாலும் இப்படம் தெலுங்கில் மட்டுமே அதிக வரவேற்பைப் பெற்றது. ஹிந்தியில் சுமாராகவும் மற்ற மொழிகளில் மிகச் சுமாரான வரவேற்பையும் மட்டுமே பெற்றது. வசூல் ரீதியாக 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இப்படம் ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. அப்போதே விரைவில் ஆங்கிலத்திலும் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஆங்கில டப்பிங்கை நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் உலக அளவில் இந்திய மொழிகளைத் தெரியாதவர்கள் கூட இப்படத்தைப் பார்க்கலாம். இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தின் ஆங்கில டப்பிங்கும் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஹிந்தியில் மட்டும் ஓடிடியில் இன்னும் வெளியாகவில்லை. எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியீடு என்ற ஒப்பந்தம் இருப்பதால் இந்த மாதக் கடைசி வாரத்தில்தான் ஹிந்தியில் வெளியாகும்.




