முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி சிறப்பு வேடத்திலும், விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை வேடத்திலும் நடித்துள்ள படம் ‛லால் சலாம்'. பிப்., 9ல் ரிலீஸாகிறது. ஐஸ்வர்யா கூறுகையில், ‛‛இந்த படம் சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை ஆழமாய் பதிய வைக்கும். அப்பா உடன் பணியாற்ற எனக்கு விருப்பமே கிடையாது. ஆனால் நடந்தது. சில கதைகளுக்கு என்ன தேவையோ அது அதுவே எடுத்துக் கொள்ளும். அப்படி தான் அப்பா ரஜினி, ரஹ்மான், ஜீவிதா உள்ளிட்ட எல்லோரும் இந்த கதைக்கு வந்தாங்க.
லால் சலாம் படம் யாருக்கும் எதிரானது அல்ல. முதன்முறையாக அப்பா முஸ்லீம் வேடத்தில் நடித்துள்ளார். கதை தான் இதில் ஹீரோ, அப்பாவோ, விஷ்ணு விஷாலோ இல்லை. எனது மகன்கள் நடிக்க வருவார்களா என்று தெரியவில்லை. நடந்தாலும் தவறில்லை.
அடிக்கடி இளையராஜா சாரை போய் பார்ப்பேன். அவரிடம் திட்டு வாங்கினால் எனக்கு கொஞ்சம் பூஸ்ட்-அப் ஆகும். ஏஐ தொழில்நுட்பத்தை ரஹ்மான் நல்ல விதமாக பயன்படுத்தியது எனக்கு தவறாக படவில்லை. அது என் படத்தில் நடந்தது மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறினார்.