
ரூ.300 கோடி வசூலைக் கடந்த ஹனுமான்
25 நாட்களில் இப்படம் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கில் பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் மற்ற முன்னணி நடிகர்களின் படங்களைக் காட்டிலும் வளரும் இளம் நடிகரான தேஜா நடித்த இந்த "ஹனுமான்" படம் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளது இந்தியத் திரையுலகிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பும், வசூலும் கிடைத்ததைத் தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர் அமெரிக்கா சென்று கடந்த மூன்று நாட்களாக ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!