சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் லால் சலாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று இரவு 9 .30 மணிக்கு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த டிரைலரில், ஊர் திருவிழா, இரண்டு பிரிவினருக்கிடையே கடும் மோதல். மொய்தீன் பாயாக ரஜினி சண்டைக் காட்சியோடு என்ட்ரி என அதிரடியான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, ‛‛ஊருக்குள்ள வெள்ளை வேஷ்டி கட்டிக்கிட்டு அல்லாஹு அக்பர்னு அஞ்சு நேரம் நமாஸ் பண்ணிக்கிட்டு, சாந்தியும் சமாதானமும் பேசிக்கிட்டு இருக்கிற ஆளுன்னு நெனச்சியா? பம்பாய்ல பாய் ஆளே வேறடா. மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை. மனித நேயத்தை அதற்கு மேல வை. அதுதான் இந்த நாட்டோட அடையாளம்...'' என இந்த லால் சலாம் டிரைலரில் இடம் பெற்றுள்ள வசனங்கள் ஹைலைட்டாக அமைந்திருக்கின்றன. டிரைலர் வெளியான 14 மணிநேரத்தில் 14.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.