Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'லவ்வர்' - 18 'கெட்ட' வார்த்தைகளும் சென்சாரில் 'கட்'

04 பிப், 2024 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Bad-words-in-Lover-Trailer

'குட்நைட்' படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் அடுத்த படமான 'லவ்வர்' படத்திலும் மணிகண்டன் தான் கதாநாயகன். அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ கவுரிப்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. டிரைலரில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில், கோபத்தில் மணிகண்டன் சில கெட்ட வார்த்தைகளைப் பேசியுள்ளார். விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தில் விஜய் பேசிய கெட்ட வார்த்தையையும் சேர்த்து இன்னுமொரு கெட்ட வார்த்தையை மணிகண்டன் பேசியுள்ளார். விஜய் முன்னணி நடிகர் என்பதால் அந்த கெட்ட வார்த்தை சர்ச்சையானது. மணிகண்டன் வளர்ந்து வரும் நடிகர் என்பதால் இன்னும் சர்ச்சையாகவில்லை.

இந்நிலையில் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அதில் நீக்கப்பட்ட வசனங்கள் இடம் பெற்றுள்ளது. அந்த விதத்தில் படத்தில் இடம் பெற்ற 18 கெட்ட வார்த்தைகள் 'மியூட்' செய்யப்பட்டுள்ளன. மூன்று இடங்களில் மட்டும் தலைமுடியைக் குறிக்கும் மற்றொரு வார்த்தையை படத் தயாரிப்பாளர் வேண்டுமென கேட்டிருக்கிறார்.

'லியோ' படத்தில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை பின்னர் டிரைலரிலும் நீக்கப்பட்டது. அது போல இந்த 'லவ்வர்' படத்திலும் மணிகண்டன் பேசியுள்ள கெட்ட வார்த்தைகள் நீக்கப்படுமா?

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
171வது படத்தில் இளமையாக தோன்றும் ரஜினிகாந்த்171வது படத்தில் இளமையாக தோன்றும் ... அரசியல் பயணத்திற்கு வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறிய விஜய் அரசியல் பயணத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)