
ரூ.250 கோடி வசூலைக் கடந்த ஹனுமான்
படம் வெளியான இரண்டு வாரத்தில் 250 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சுமார் 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இவ்வளவு கோடி வசூல் சாதனை செய்திருப்பது சாதாரண விஷயமல்ல.
இந்த 2024ம் வருடத்தில் தெலுங்கில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் அதிக வசூலைக் குவித்த படமாகவும், அதிக லாபத்தைக் கொடுத்துள்ள படமாகவும் அமைந்துள்ளது.
தெலுங்கில் நேற்று வெளியாக வேண்டிய "அயலான்" படம் வெளியாகாமல் போனதால் பல தியேட்டர்களில் மீண்டும் "ஹனுமான்" படத்தைத் திரையிட்டுள்ளார்களாம். அதனால், இந்த வார இறுதி வசூலும் தெலுங்கில் நன்றாக இருக்கும் என்கிறார்கள். இதற்கடுத்து இப்படம் ஓடி முடியும் போது 300 கோடி வசூலைக் கடக்கவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!