
இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ்
இந்த வாரம் ஜனவரி 25ம் தேதி தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள். அடுத்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் இத்தனை படங்கள் வெளியாகின்றன. எப்படியாவது குறைந்தபட்ச வசூலையாவது அள்ளிவிடலாம் என்பதுதான் திட்டம்.
ஜனவரி 25ம் தேதி, “ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், முடக்கறுத்தான், தூக்குதுரை"", ஜனவரி 26ம் தேதி ""லோக்கல் சரக்கு, த.நா, நியதி,” ஆகிய படங்களும் வெளியாகின்றன. எல்லாமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். இருந்தாலும் விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக் கொண்டு எந்தப் படம் வசூலை அள்ளப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!