அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்று அதன் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்து அங்கும் முன்னணி நடிகையாக மாறி உள்ளார். ரன்பீர் கபீருடன் அவர் இணைந்து நடித்த அனிமல் படம் 800 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. இந்தபட வெளியீட்டுக்கு முன் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா போன்றே மார்பிங் செய்து உருவாக்கப்பட்ட ஒரு ஆபாச வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு திரையில் இருந்து அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கத்ரீனா கைப், கஜோல் ஆகியோரின் டீப் பேக் வீடியோ வெளியானது. இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்கும் விதமாக விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோவை வெளியிட்ட முக்கிய நபரை கைது செய்துள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.