திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா |

பெங்களூரு: கர்நாடகாவில் நடிகர் யஷுக்கு கட் அவுட் வைக்க போய் மூன்று ரசிகர்கள் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளனர்.
கேஜிஎப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் யஷ். கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யஷுக்கு இன்று(ஜன.,08) பிறந்தநாள். இதனால் கடக் மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் ஹனமந்த ஹரிஜன்(வயது21), முரளி(வயது 20), நவீன் காஜி(வயது19) உள்பட 10 பேர் கட் அவுட் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட் அவுட் மின்சார வயரில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து ஹனமந்த ஹரிஜன், முரளி, நவீன் காஜி ஆகிய 3 ரசிகர்கள் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.