தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

மகா மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயமுரளி தயாரிக்கும் படம் 'தினசரி'. அறிமுக இயக்குனர் சங்கர் பாரதி இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதை நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமெரிக்காவை சேர்ந்த நடிகை சிந்தியா லவுர்டே நடிக்கிறார். இவர்கள் தவிர எம்.எஸ்.பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா, உள்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சங்கர் பாரதி கூறும்போது, "மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்னைகளை எப்படி கையாள்வது.? குறிப்பாக இளைஞர்கள் பணம் இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை நகைச்சுவையுடன் ஆக்ஷனையும் கலந்து விறு விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன். நாயகனாக நடிக்கும் ஸ்ரீகாந்த் ஜோடியாக அமெரிக்காவில் வாழும் சிந்தியா லவுர்டேவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளேன். இளையராஜா என்ற மாபெரும் சாதனையாளர் என் படத்திற்கு இசையமைப்பது நான் செய்த பாக்கியம்." என்கிறார்.




