தமிழில் நடிக்கும் குஷி ரவி | கடவுள் பெயரில் டைட்டில்கள் : கண்டிப்பு காட்டும் தணிக்கை குழு | பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன் | பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா | செல்வராகவன் அக்காவாக மாறிய கவுசல்யா | திருவண்ணாமலையில் படமாக்கப்பட்ட 'கொலைச் சேவல்' | ஓடிடியில் டாப் 2ல் 'வித் லவ்' | 'துரந்தர் 2' பிரிமியர்: தமிழகத்தில் சிறப்பான முன்பதிவு | எம்ஜிஆர் பற்றி 'கிண்டலாக' பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | மார்ச் 18ல் 'அல்லு சினிமாஸ்' ஆரம்பம் |

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ மற்றும் கவுஸ்டப் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் 'ஆலம்பனா'. பாரி கே.விஜய் இயக்கி உள்ள இந்த படத்தில் வைபவ், பார்வதி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் முனீஷ்காந்த், யோகி பாபு, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் லியோனி, பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்வில் வைபவ் பேசியதாவது: எப்போதும் ஜெய், பிரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப்படம் எனக்குப் புதுவிதமான பேமிலி எண்டர்டெயினராக இருக்கும் என்றார்.
நடிகை பார்வதி பேசியதாவது : எனக்கு காமெடி படங்கள் மிகவும் பிடிக்கும். அப்படியான ஒரு படத்தில் இப்போது நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் முனீஷ்காந்த், காளி வெங்கட் , ஆனந்த்ராஜ் என நல்ல அனுபவமிக்க நடிகர்களோடு வேலை பார்த்தது சந்தோஷமாக இருந்தது. வைபவ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இந்தப்படம் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் ரசித்து சிரிக்கும் படமாக இருக்கும். என்றார்.