ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய பல திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி உள்ளன. விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படம் வீரப்பனை தழுவி எடுக்கப்பட்டது. 'சந்தனக்காடு' என்ற பெயரில் தொலைக்காட்சி தொடர் வெளிவந்தது. அதன் பிறகு பல குறும்படங்கள், ஆவணப்படங்கள் வெளிவந்தன. கடைசியாக 'தி ஹண்டிங் வீரப்பன்' என்ற வெப் தொடர் வெளியாகி பரவலான பாராட்டுகளை பெற்றது.
இந்த நிலையில் 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற பெயரில் புதிய வெப் தொடர் தயாராகி உள்ளது. இதனை தீரன் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஷரத் ஜோஷி இயக்கி உள்ளார். மற்ற தொடர்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால். வீரப்பனின் கதையை வீரப்பனே விவரிப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. வீரப்பன் தன் வாழ்க்கை பற்றிய பேசிய வீடியோ இதில் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர வீரப்பன் வேட்டையில் பங்கேற்ற அதிகாரிகள், வீரப்பனுடன் இருந்தவர்கள், நக்கீரன் கோபால், சீமான், நடிகை ரோகினி உள்ளிட்டவர்கள் பேசி உள்ளனர். சித்தரிக்கப்பட்ட காட்சிகளுடன் நேரடி காட்சிகளும் இதில் இடம் பெறுகிறது. வருகிற 8ம் தேதி முதல் ஜீ5 தளத்தில் வெளியாகிறது.




