‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை குவித்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ் . சமீபத்தில் நடிகர் விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வசூலைக் குவித்தது.
இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்நிலையில் ‛அவள் பெயர் ரஜ்னி' என்கிற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் கூறியதாவது, "அடுத்த வாரத்தில் ரஜினி 171 படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியை ஆரம்பிக்க போகிறேன். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்குகிறது," என தெரிவித்தார்.