ஐமேக்ஸில் ஜெயிலர் 2 | ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு | ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி மாற்றம் | 'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் |

கடந்த 1995ம் ஆண்டில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'முத்து'. கவிதாலயா பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் இந்தியாவில் வசூலில் சாதனை படைத்ததை தாண்டி ஜப்பான் நாட்டில் புதிய சாதனை உருவாக்கி பல வருடங்களாக தக்க வைத்திருந்தது. ரஜினிக்கு ஜப்பானிலும் ரசிகர்களை ஏற்படுத்தி தந்தது.
முத்து படம் தெலுங்கு பதிப்பில் டிசம்பர் மாதத்தில் ரீ ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் அறிவித்தனர். இப்போது முத்து திரைப்படம் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த வருடத்தில் தமிழில் ரஜினி நடித்த பாபா, தனிகாட்டு ராஜா ஆகிய படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.




