தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

அக்மார்க் திருச்சி பொண்ணு அனுகீர்த்தி வாஸ். 'மிஸ் இந்தியா' பட்டத்தின் மூலம் அடையாளம் பெற்று நடிகை ஆனார். நடித்தது இரண்டு படங்கள் தான். தமிழில் 'டிஎஸ்பி' படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தார். தெலுங்கில் சமீபத்தில் வெளியான 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தில் ரவிதேஜா ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தமிழில் 'வெற்றி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் குறைவாக நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார். தனது கவர்ச்சி படங்களை அதிகமாக வெளியிட்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‛‛5 ஆண்டுளுக்கு முன்பு வரை எனக்கு சோஷியல் மீடியா பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இப்போதுதான் அதன் தேவையை உணர்ந்திருக்கிறேன். நடிக்க வாய்ப்புகள் வரும்போது உங்கள் இன்ஸ்டாம்கிராம் ஐடி அனுப்புங்கள் என்றுதான் கேட்கிறார்கள். அதை பார்த்தே முடிவு செய்கிறார்கள். எனவே நான் செய்யும் விஷயங்களை அதில் பதிவேற்ற வேண்டிய தேவை இருக்கிறது. உண்மையில் சோஷியல் மீடியா வழியாக ரீச் நிறைய கிடைக்கிறது. எப்படியிருப்பினும் சமூக வலைதளங்கள்தான் சமூகத்தைப் பார்ப்பதற்கான இன்னொரு கண்ணாடி. எனவே என்னை போன்ற நடிகைகளுக்கு அது கட்டாய தேவையாகிறது,'' என்கிறார் அனு.