ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தின் ஹீரோ தனுஷா? | 'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு | பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி |

ஞானவேல் இயக்கும் ரஜினியின் 170வது படத்தில் ஹிந்தி நடிகரான அமிதாப்பச்சனும் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. அமிதாப்புடன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு நடிப்பது பற்றி, “எனது இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது,” நேற்று எக்ஸ் தளத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார்.
அதற்கு நேற்றிரவு பதிலளித்த அமிதாப்பச்சன், “ரஜினிகாந்த் சார்… எனக்கு நீங்கள் மிகவும் கருணை நிறைந்தவர், ஆனால், படத்தின் தலைப்பைப் பாருங்கள்... அது 'தலைவர் 170'. தலைவர் என்றால் லீடர், ஹெட், சீப். நீங்கள்தான் தலைவர், லீடர், சீப். அதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா மக்களே ?. என்னை உங்களுடன் ஒப்பிடாதீர்கள். உங்களுடன் மீண்டும் வேலை செய்வது எனக்குப் பெருமை,” என பதிவையும், பின்னர் ஒரு மணி நேரம் கழித்து, “மீண்டும் சிறந்த தலைவருடன்.. த லீடர், ஹெட், சீப் ரஜினிகாந்த்துடன் அவரது 170வது படத்தில். 33 ஆண்டுகளுக்குப் பிறகு… என்ன ஒரு மரியாதை, பெரிய பாக்கியம்… நீங்கள் இன்னும் துளி கூட மாறவில்லை. இன்னும் மிகச் சிறந்தவர்தான், தலைவர் 170,” என மற்றொரு பதிவையும் பதிவிட்டுள்ளார்.
அவரது இரு பதிவுளுக்கும் ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள். பல சினிமா பிரபலங்களும் இருவரும் இணைந்து நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.




