சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

விஜய் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'லியோ' படம் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக சிலர் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தை வெளியிடுவதற்கு முதல் நாள் வரையிலும் சில முக்கிய தியேட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள்.
80 சதவீதம், 20 சதவீதம் என டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் படத்தை வெளியிட வினியோகஸ்தர்கள் தரப்பில் நிர்பந்திக்கப்பட்டதே அதற்குக் காரணமாக இருந்தது. சிலர் மட்டுமே அப்படியெல்லாம் படத்தை வெளியிட முடியாது என நிராகரித்துவிட்டனர். ஆனால், பலரும் அப்படியான சதவீதத்திற்கு உட்பட்டு படத்தை வெளியிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இருப்பினும் படம் வெளியான பின் இதற்குரிய தீர்வை எட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிலர் படத்தை வெளியிட்டார்கள் என்கிறார்கள்.
எனவே, இது குறித்து மேலும் விவாதிக்க நாளை(அக்., 26) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 60 சதவீதம் 40 சதவீதம் என்ற நிலையில்தான் படத்தை வெளியிடுவோம் என தியேட்டர்காரர்கள் உறுதியாக இருக்கிறார்களாம். இந்த விவகாரம் குறித்து நாளை முடிவு எட்டப்படவில்லை என்றால் 'லியோ' பங்கு பிரிப்பில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது.




