என்ன ஆச்சு? - மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சுனைனா
Advertisement
Advertisement
என்ன ஆச்சு? - மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சுனைனா
அக் 21, 2023
அ நிறம் | அளவு
Advertisement
தமிழில் காதலில் விழுந்தேன் என்ற படத்தில் அறிமுகமானவர் சுனைனா. அதன்பிறகு மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை, திருத்தணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக சுனைனா கதையின் நாயகியாக நடித்த ரெஜினா என்ற படம் திரைக்கு வந்தது. அப்படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தற்போது அவர், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள், விரைவில் நான் மீண்டும் பலமாக திரும்பி வருவேன் என்று தெரிவித்திருக்கிறார். அவரது இந்த புகைப்படம் மற்றும் பதிவினை பார்த்த ரசிகர்கள், சுனைனாவுக்கு உடம்புக்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்புவதோடு, விரைவில் அவர் பூரண நலம் பெற்று வரவேண்டும் என்றும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!