தமிழக அரசு விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

'பாகுபலி' படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்தார் பிரபாஸ். அதன்பின் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் தளத்திலும் நுழைந்தார். அவருடைய கணக்கில் 10 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் இருந்தார்கள். இந்நிலையில் நேற்று முதல் அவருடைய கணக்கு திடீரென காணாமல் போய்விட்டது.
அந்த கணக்கை பிரபாஸே நீக்கிவிட்டாரா அல்லது யாராவது ஹேக் செய்துவிட்டார்களா என்பது தெரியவில்லை. பான் இந்தியா நடிகராக இருக்கும் பட்சத்தில் சமூக வலைத்தளங்களில் அவர்களது படம் பற்றிய அப்டேட்டுகள் கொடுப்பதால் ரசிகர்கள் மகிழ்கிறார்கள். பிரபாஸ் நடித்து அடுத்து 'சலார்' படம் வெளிவர உள்ள நிலையில் அவருடைய இன்ஸ்டா கணக்கிற்கு என்ன ஆனது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.