கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் | ஆந்தாலஜி கதையில் உருவாகும் 'வவ்வல்ஸ்' | 40 படங்களில் போலீசாக நடித்த சமுத்திரக்கனி | விதார்த்தின் புதிய படம் 'தொடக்கம்' | பிளாஷ்பேக்: சிரஞ்சீவிக்கு கொடுத்த வாக்கை 9 வருடங்களுக்கு பிறகு காப்பாற்றிய பாரதிராஜா |

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்து சமீபத்தில் வெளிவந்த சந்திரமுகி 2 படம் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து ஜிகிர்தண்டா 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், நயன்தாரா இணைந்து ஹாரர் த்ரில்லர் ஜானரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தை விட்டு நயன்தாரா சமீபத்தில் வெளியேறியதாக கூறப்படுகிறது. அதனால் வேறொரு நாயகியை தேடி வருகின்றனர். மேலும் கதையையும் சற்று மாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதில் ராகவா லாரன்ஸ் தான் ஹீரோ என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள்.




