'பெத்தி' படத்திலிருந்து வெளியேற நினைத்தேன் ; சிவராஜ்குமார் நெகிழ்ச்சி | 'திரிஷ்யம்' நடிகை புகாரின் பேரில் சக நடிகை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு | கொச்சியில் நடைபெற்ற ஆஷா சரத் இளைய மகள் நிச்சயதார்த்தம் | பிளாஸ்ட் : 25 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கருப்பு : வெளியீட்டிற்கு முன்பு 'டெபிசிட்', பின்பு 'பிராபிட்' | 'மோலிவுட் டைம்ஸ்' படத்தில் மீண்டும் அசத்துவார்களா பிரேமலு பிரண்ட்ஸ்? | ஜூன் 25ல் திரைக்கு வரும் ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு வண்ணத்திரை வாய்ப்பை வழங்கிய வானொலி நாடகம் | ரசிகர்கள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள் : பூஜா ஹெக்டே | ஆடை குறித்து நடிகை பரீனாவின் பளிச் பதில் |

ஹிந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கங்கனா ரணவத். அங்குள்ள முன்னணி நடிகர்களைப் பற்றியும், நடிகைகளைப் பற்றியும் தைரியமாக விமர்சிக்கும் ஒரே நடிகை. எவ்வளவோ எதிர்ப்புகளை மீறி அங்கு வளர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
தமிழில் விரும்பி நடிக்கும் கங்கனாவுக்கு இங்கு மட்டும் வெற்றி கிடைக்காமல் ஏமாற்றமாகவே இருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பே 2008ல் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. ஒரு வேளை வெற்றி பெற்றிருந்தால் தொடர்ந்து தமிழிலும் நடித்திருப்பார் கங்கனா.
அதற்குப் பிறகு ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தியவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021ல் வெளிவந்த மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படமும் வரவேற்பைப் பெறாமல் தோல்வியைத் தழுவியது.
இருப்பினும் மூன்றாவது முயற்சியாக 'சந்திரமுகி 2' படத்தில் நடித்தார். இந்த முறை அவர் ஏமாறவில்லை, படம் வரவேற்பைப் பெற்று கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரைப் பற்றிப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களின் பதிவுகளுக்கு கங்கனாவின் குழுவினர் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.




