சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். தனது அப்பாவை வைத்து 'கோச்சடையான்' என்ற 'மோஷன் கேப்சரிங்' படத்தை இயக்கினார். அடுத்து தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தையும் இயக்கினார். இயக்குனராவதற்கு முன்பாக 2010ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய 'கோவா' படத்தையும் தயாரித்திருந்தார்.
தற்போது 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்கிறார். அது குறித்து, “நான் உண்மையிலேயே இருந்த இடம் இது. படப்பிடிப்புத் தளத்தில்… அரங்கத்தில்… 2010ல் நான் 'கோவா' படத்தைத் தயாரித்தேன். 13 ஆண்டுகளுக்குப் பிறகு… மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில்.. பழைய விஷயம்தான்… ஆனால், இன்னும் புத்திசாலித்தனமாக… கேமரா இன்று ஆரம்பமாகியது. கடவுள் மற்றும் குருக்களின் ஆசியுடன்… முன்னோக்கி… மற்றும் மேல்நோக்கி…”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
சவுந்தர்யா தயாரிக்கும் இந்தப் படத்தை நோவா ஆபிரகாம் இயக்க, அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார்.