
இசையமைப்பாளர் தேவா வில்லனா? தனுஷின் பலே ஐடியா
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு இசையமைப்பாளர் தேவா அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "தனுஷ் இயக்கும் புதிய படத்தில் என்னை வில்லனாக நடிக்க அழைத்தார். எப்படி என்னை நம்பி நடிக்க கூப்புடுறீங்க என கேட்டேன். அதற்கு தனுஷ் உங்க அளவுக்கு யாரும் வடசென்னை பாஷை பேச முடியாது என்று கூறினார். ஆனால், நான் பாடல்கள் பாடும் போதே நோட்ஸ் இல்லாமல் பாட முடியாது. என்னால் நீங்கள் சொல்லும் வசனங்களை ஞாபகம் வச்சி பேச முடியாது. என்னால் மத்தவங்களுக்கு சிரமமா இருக்கும்னு என வேணாம்னு சொல்லிட்டேன்" என தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!