இயக்குனர் விக்ரமின் மகனை வாழ்த்திய விஜய், ரஜினி | ஹிந்தியில் வெளியாகும் 'அரண்மணை 4' | இது புதுசு: ஆடியோ ஓடிடி துவக்கம் | விஜயகாந்த் போன்ற ஒருவரை இனி பார்க்கவே முடியாது: ரஜினிகாந்த் புகழாரம் | 'தி ரிங்ஸ் ஆப் பவர்' 2வது சீசன் 29ம் தேதி வெளியாகிறது | ஜூலை 14ம் தேதி இளையராஜா கச்சேரி: சென்னையில் நடக்கிறது | பிளாஷ் பேக்: கட்டபொம்மனை கண்டு மிரண்ட தமிழ் சினிமா | காதலிக்க நேரமில்லை சந்திராவின் ரீ-என்ட்ரி! எந்த சீரியல் தெரியுமா? | கையில் கட்டுடன் கேன்ஸ் புறப்பட்ட ஐஸ்வர்யா ராய் | தாமு ஏன் வெங்கடேஷ் பட்டுடன் வரவில்லை?: புதிய தகவல் |
நெட்மெக் புரொடக்ஷன் தயாரிப்பில், உருவாகி உள்ள படம் 'டியர்'. 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், 'ப்ளாக் ஷீப்க் நந்தினி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இசை மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், டிரிக்கர், துணிவு, டைனோசர்ஸ் போன்ற படங்களை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஜி.வி.பிரகாசும், ஐஸ்வர்யா ராஜேசும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.