தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப்பிறகு கடந்த 2015ம் ஆண்டு '49-ஓ' படத்தில் நடித்தார். தொடர்ந்து 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது', 'வாய்மை' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் 2016க்குப் பிறகு அவர் எந்தப் படங்களில் நடிக்கவில்லை.
இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி நாயகனாக 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஷாஷி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் ராஜகோபால் எழுதி, இயக்குகிறார். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார்.
படத்தை இயக்கும் சாய் ராஜகோபால் கவுண்டமணி படங்களுக்கு காமெடி வசனம் எழுதியவர். சுந்தரன் நீயும் சுந்தரன் நானும், கிச்சா வயசு 16 படங்களை இயக்கியவர். தற்போது இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் புதிய அப்பேட் தற்போது வெளியாகி உள்ளது. இதில் கவுண்டமணி 3 வேடங்களில் நடிக்கிறார். இதில் அவர் நல்ல அரசியல்வாதி, கெட்ட அரசியல்வாதி, பொதுமக்களில் ஒருவர் என முப்பரிமாணங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.