சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகா சாவ்லா நடிக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இது அக்கா, தம்பி உறவு சம்பந்தப்பட்ட படம் என்கிறார்கள். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற செப்டம்பர் 10ம் தேதி ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.