திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா |

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து விரைவில் இந்த படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகவுள்ளது. சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் அளித்த பேட்டி ஒன்றில் கேப்டன் மில்லர் குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி, " கேப்டன் மில்லர் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது. இப்படத்தின் பின்னணி இசை ஹாலிவுட் படங்களின் தரத்தில் இருக்கும். கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடலுக்கு இரண்டு பெரிய ஹீரோக்கள் இணைந்து ஒன்றாக நடனமாடி உள்ளனர். அது இன்னும் கூடுதல் சிறப்பு ஏற்படுத்தியுள்ளது" என தெரிவித்துள்ளார்.