அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, அபிநயா, சுனில், செல்வராகவன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் விநாயகர் சதுர்த்தி வெளியீடு என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு மார்க் ஆண்டனி படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அந்த போஸ்டரில், இந்த படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டைம் டிராவல் கதையில் உருவாகியுள்ள இந்த படம் சினிமாவுக்கு புதிது என்பதால் கண்டிப்பாக ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெரும் என்றும் அப்படக்குழு தெரிவித்துள்ளது.