நானி இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்திற்கு 'பிளடி ரோமியோ' என டைட்டில் | வாரணாசி : ஜார்ஜியாவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு | ராஜமவுலி, மகேஷ்பாபு சண்டை ; ராம் கோபால் வர்மா பகிர்ந்த வைரல் வீடியோ | கேரளா ஸ்டோரி 2 வெளியீடு குறித்து வழக்கு, அடுத்தக்கட்ட நகர்வு என்ன | நிலச்சரிவில் கால் இழந்த பெண்ணுக்கு செயற்கைக்கால் மற்றும் சொந்த வீடு ; மம்முட்டி உதவி | 'கராத்தே பாபு'வில் ரவி மோகனுடன் மோதும் சக்தி வாசுதேவன் | அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி |

ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த 'ஜெயிலர்' படத்திற்கு உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் இப்படம் அங்கெல்லாம் 105 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படத்தை வெளியிட்டுள்ள ஐங்கரன் இன்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் படத்தை வெளியிட்டுள்ள பிரைம் மீடியா நிறுவனம் அங்கு 'ஜெயிலர்' படத்தின் வசூல் 4 மில்லியன் யுஎஸ் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 33 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதர நாடுகளில் உள்ள வினியோகஸ்தர்கள் பட வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் வசூல் தொகை பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது. அமெரிக்காவை அடுத்து அரேபிய நாடுகளில் 32 கோடி, மலேசியாவில் 17 கோடி, ஐரோப்பா மற்றும் இலங்கையில் 13 கோடி, இங்கிலாந்து, ஐயர்லாந்து நாடுகளில் 8 கோடி, சிங்கப்பூரில் 8 கோடி, ஆஸ்திரேலியாவில் 6 கோடி, கனடாவில் 6 கோடி, சவூதி அரேபியாவில் 3 கோடி, ஆஸ்திரேலியாவில் 6 கோடி, நியூசிலாந்தில் 70 லட்சம் வரையில் வசூலித்திருக்கிறதென தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அளவில் தமிழகத்தில் 85 கோடி, தெலுங்கில் 35 கோடி, கர்நாடகாவில் 32 கோடி, கேரளாவில் 24 கோடி, வட இந்தியாவில் 5 கோடி என மொத்தமாக உலக அளவில் 310 கோடியைக் கடந்திருக்கிறது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்தின் வசூலை 'ஜெயிலர்' முறியடிக்குமா என்பதே இப்போது ரஜினி, கமல் ரசிகர்களிடையிலான சமூக வலைத்தள சண்டையாக இருந்து வருகிறது.