'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் 'ஜவான்'. தீபிகா படுகோன், நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரண்டாம் சிங்கிள் ஷாருக்கான், நயன்தாரா இடையில் உள்ள காதல் பாடல். தமிழில் (ஜயோடா), ஹிந்தியில் (சல்லியா), தெலுங்கில் (சலோனா) என தலைப்பு வைத்துள்ளனர் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி இப்பாடல் வெளியாகிறது.




