‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் | ஒரே படத்தில் 5 ஹீரோயின்கள் | 40 படங்களில் போலீசாக நடித்த சமுத்திரக்கனி | விதார்த்தின் புதிய படம் 'தொடக்கம்' | பிளாஷ்பேக்: சிரஞ்சீவிக்கு கொடுத்த வாக்கை 9 வருடங்களுக்கு பிறகு காப்பாற்றிய பாரதிராஜா | ஏஆர் ரஹ்மானின் தெலுங்கு 'பெத்தி' பாடல் புதிய சாதனை | பிளாஷ்பேக்: கடன் பற்றி எச்சரித்த முதல் படம் | திருத்தப்பட்ட வீடியோவுடன் 'வா வாத்தியார்' தெலுங்கு ரிலீஸ் |

8 தோட்டாக்கள், ஜீவி போன்ற படங்களில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கும் படம் ‛லாக் டவுன் நைட்ஸ்'. முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட இப்படத்தை ‛2 எம் சினிமா' வினோத் சபரீஷ் தயாரிக்க, ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டான்லி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். பூச்சாண்டி படத்தில் நாயகியாக நடித்த ஹம்ஷினி பெருமாள் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன், கங்கை அமரன், பென்குயின் படத்தில் வில்லனாக நடித்த மதியழகன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி வெளியிட்டார்.




