எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சோகம் : கேஸ் வெடித்து ஒருவர் பலி, மூவர் படுகாயம் | மகளுக்கு திருமணம் : முதல்வர் விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கிய குஷ்பு குடும்பத்தினர் | ராஷ்மிகா, கிரித்தி சனோன் படம் லெஸ்பியன் கதை இல்லை : இயக்குனர் விளக்கம் | ரவீணா டான்டன் தாயார் வீட்டில் 25 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு | சல்மான்கான் அனுப்பிய லீகல் நோட்டீஸ் ; 'காலா ஹிரண்' இயக்குனர் பதிலடி | இளையராஜாவின் பத்து.... தமிழ் திரை இசையின் முத்து... | நடிகர் சங்க முழு நிர்வாகமும் பதவி விலக வேண்டும் - மாலா பார்வதி ஆவேசம் | நான் உயிருடன் தான் இருக்கிறேன் ; வீடியோ வெளியிட்ட மம்முட்டி பட நாயகி | தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறாரா மாரி செல்வராஜ்? | 'மட்பிஷ்' படத்தின் மூலம் மலையாள படத்தில் அறிமுகமாகிறார் கெனிஷா |

கடந்த சில நாட்களுக்கு முன்பு 'அடியே' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் மிஷ்கின் பங்கேற்றார். மைக்கை கையில் பிடித்தால் அவன் இவன் என பேசும் மிஷ்கின் இந்த விழாவில் என்ன பேசப்போகிறார் என அனைவரும் ஆவலாக காத்திருந்த போது விஷால் உடன் துப்பறிவாளன் 2 படத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து பேசினார்.
அதன்படி, "என்னை பற்றி விஷால் பேசும்போதெல்லாம் நான் துரோகத்தை மறக்கவே மாட்டேன் என்கிறார். நான் அப்படி என்ன துரோகம் செய்துவிட்டேன் என தெரியவில்லை. அந்த சமயத்தில் நான் மேடையில் விஷால் குறித்து பொறுக்கி பையன் என பேசிய வார்த்தையை இன்னும் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகிறார்கள். என் மனதிற்கு நெருக்கமான விஷாலிடம் எனக்கு நல்ல நட்பு இருந்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டோம். நானும், விஷாலும் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும், விஷாலின் படங்கள் வெற்றிபெற வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டு தான் வருகிறேன். இப்படி சொல்வதால் விஷாலுக்கு நான் ஐஸ் வைத்து அவர் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற முயற்சிக்கிறேன் என்று எண்ண வேண்டாம். விஷாலை வைத்து இனிமேல் சத்தியமாக படம் இயக்க மாட்டேன்".
இவ்வாறு கூறினார் மிஷ்கின்.




