கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை (ஆக.,10) தியேட்டரில் வெளியாகிறது.
இந்நிலையில், இன்று (ஆக.,9) காலை நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ''4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை செல்கிறேன். ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்'' எனத் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து பெங்களூரு சென்றுள்ள ரஜினி, அங்கிருந்து தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை பயணிக்கிறார். ஒருவாரத்திற்கு மேல் அங்கு இருக்கும் ரஜினி அதன் பின்னர் தான் சென்னை திரும்ப உள்ளார்.




